Wednesday, November 4, 2015

நினைவலைகள் ...
                  தொடர்ச்சி ....1

வீட்டிலே வளர்த்த நாட்டுக்கோழி
ஞாயிற்றுக்கிழமைகளில் அதுதான்
எங்களுக்குச் சரியான தீனி......
இரவுநேர புரோட்டோக் கடைகளின்
இனிமையான சத்தம், இசையின்
வடிவமாய் வந்து எம்மைச் சேருமே...
இளைப்பாரவும், களைப்பாரவும்
எல்லாச் சூழ்நிலையும் வந்தெம்மைச்
சேர்ந்ததே!...
அந்தக் காட்சி வந்து,வந்து போகுதே.....

கம்பங்காடுகள் கண்ணுக்கெட்டும்
தூரம் பரந்து கிடக்க...
பூக்காடுகள் எங்கும் அழகாய்
காட்சியளிக்க....
திராட்சைத் தோட்டமோ
விரிந்திருக்க...
தக்காளிக் காட்டின் தனியழகும்,
பருத்திக் காட்டின் பரவசமும்
பார்க்கப் பார்க்க கொள்ளை கொள்ளுமே!

ரோஜாத்தொட்டமும், அதன் வேலியாய்
நொச்சிக் கூட்டமும்,...
நொச்சி இலையின் ஆவியும்,
பச்சைப் புல்வெளியும், ..எம்மை
பரவசமாக்கியதே.....
மொச்சைப் பயிரும், பச்சைப்பயிரும்
கச்சிதமாய் எமக்கு உணவானதே...

கரும்பை விளைவித்த எம்மக்கள்
கலங்காதிருந்தனரே.!
கரும்புப்பாகும், அதன் வெள்ளமும்
கட்டான உடம்பிற்குக் கட்டியம்
காட்டியதே.......
களங்கமில்ல மனம் படைத்த
எம் கண்ணியமிக்க கிராமமக்கள்
வெகுளியாய் வாழ்க்கை நடத்திய
வெகுஜனக் கூட்டம்.....பளிங்கு போல்
பாசங்காட்டும் பாசக்கூட்டம்.....
எம் கண்ணில் வந்து, வந்து போகுதே!...

நினைவுகள் தொடரும் ......
https://docs.google.com/spreadsheets/d/1uxfTyKp5cvqRGAEXzTY_ty4kcV68lubzdVGEwmlo4NM/edit#gid=2070558149
Displaying P_20150926_105404.jpg       நண்பர்களே வணக்கம்,  1998 ஆம் ஆண்டில் எந்தக்கவலையுமில்லாத அந்தக் காலக்கட்டத்தில் பென்சில்,             அழிப்பான் ( eraser ), பயன்படுத்தாமல், பால்பாயின்ட் பேனாவினால் மட்டுமே நான் வரைந்த மகாத்மாவின் அழகிய படம். இன்று இதைப்போல வரைய நேரமோ, அதற்கான சூழ்நிலையோ இல்லாதது வருத்தமே....

அப்படி வாய்ப்புக் கிடைத்தால் பல படங்களை இன்றும் , என்றும் உருவாக்கலாம்.....

குறிப்பு :  இந்தப்படம் பல ஆண்டுகளுக்குப் பின் எனக்குக் கிடைத்தது..உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..

நன்றி...

அருணகிரி...

Wednesday, October 21, 2015

நினைவலைகள்

பசுமை மாறா நினைவுகளும்;
மாற வேண்டிய நினைவுகளும் ;
திரும்பவே வரக்கூடாத நினைவுகளும் ;
அடிக்கடி வந்து, வந்து போகுதே.....!
ஆம்...ஆம்...வந்து, வந்து போகுதே....!

பொறுப்பே இல்லாமல் படிப்பைத்
தொடர்ந்ததும் .... ...  நல்ல
செருப்புக்கூட இல்லாமல் பள்ளிக்குச்
சென்று வந்ததும்......எந்த
வெறுப்பும் இல்லாமல் நண்பர்களுடன்
பழகி வந்ததும்.....
எதிர்காலம் குறித்த கவலையே இல்லாமல்
ஊர்சுற்றித் திரிந்ததும்.......
வந்து , வந்து போகுதே....!

நானூறு மதிப்பெண் என்பது
நாட்டிலேயே ஒரு சிலர்தான்..அன்று..
கிட்டயும், கபடியும் விளையாடிய
எமக்கதுவே தேசிய விளையாட்டு:
கீற்றுக் கொட்டகையில் மணல் குவித்து
ஒய்யாரமாய் திரைப்படம் பார்த்ததும்...
ரோட்டோரப் பாலத்தில், பேருந்து
மக்களுக்கு டாட்டா காட்டியதும்....
வந்து , வந்து போகுதே...!

உச்சி வெயிலின் உக்கிரம் தெரியாது
ஓடி,ஓடி விளையாடியதும்...
களைப்பே தெரியாமலும் , உழைப்பின்
வாசமே புரியாமலும் நித்தம், நித்தம்
பெற்றோரின் பின்புலத்தில் காலம்
கழித்ததும்...சுவடாய் வந்து, வந்து போகுதே...!..........நினைவுகள் தொடரும்....

Thursday, September 24, 2015

உங்களுக்காக, உங்கள் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கிப் படியுங்கள்

பணம் குறித்த கவலை யாருக்குத்தான் இல்லை? வயதாகிக் கொண்டேதான் போகிறது. குழந்தைகள் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் நிச்சயமாக வரப் போகும் செலவுகளே வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றன.

எதிர்பாராமல் என்னென்ன செலவுகள் வருமோ யார் கண்டது? கூடவே தேவைகளும் , ஆசைகளும் சேர்ந்து கொள்ளும். சொந்த வீடு வாங்கத்தான் வேண்டும்..  நாமும் ஏன் இன்பச்சுற்றுலா செல்லக்கூடாது ?..என்ற எண்ணமும் வந்து போகும்..

இப்படிப்பட்ட எதிர்காலத் தேவைகள் மற்றும் ஆசைகளே ,பணம் குறித்த நமது கவலை கொள்ளச் செய்கின்றன.. இக்கவலைகளைக்கண்டு கொள்வதே இல்லை நாம்.. நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டுவிடுகிறார்கள் நம்மில் பலர்..வருமானம் வரட்டும், செலவுகள் அன்றாடம் இருக்கவே செய்கின்றன.  மிஞ்சுவது கவலை மட்டுமே.  எனவே சேமிக்கக்  கற்றுக் கொண்டால், அந்த சேமிப்பு வளர,வளர ,  அந்தச் சேமிப்புக்கள் , அவ்வப்போது எழும் ஆசைகளுக்கு உதவும்.  புதிய டிவி, கார், புது மாடல் செல்போன் என வீடெங்கும் பரிமளிக்கும்.

பத்து வருடங்கள் கழித்து என்ன நடக்கும் , பத்து மாதம் கழித்து கூட என்ன ஆகும்? என்ற எண்ணம் கிடையாது நம்மில் பலருக்கு.  அரசாங்கம் அறிவிக்கும் வரிச்சலுகைகளுக்கு ஏற்றவாறு ஆங்காங்கே முதலீடுகளைச் செய்துவிட்டு, எது எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாமல் இருப்பார்கள்.  ஆனால், இவற்றிற்கெல்லாம் இடையில், நிலத்திற்குக்கீழ் ஓடும் நதியைப்போல் அடிமனதில் எதிர்காலம் குறித்த கவலை மட்டும்  சலசலத்துக் கொண்டே இருக்கும்.

பணம் புரட்டல்:  இவர்கள் இப்படி என்றால், இன்னொரு வகை மற்றொரு முனையில் உள்ளனர். இவர்களுக்கு சதா சர்வகாலமும் பணம் குறித்த கேள்விகளும் , கவலைகளும் தான். எப்பொழுதும் முதலீடுகள் குறித்தே ஏதாவது  யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

எந்தப் பணத்தை எப்படிப் புரட்டுப் போட்டால் இன்னமும் அரை சதவீத வட்டியோ, லாபமோ கிடைக்கும் என்று துருவிக்கொண்டே இருப்பார்கள். இன்றைய மார்கெட் டிரென்ட் என்ன? , எது நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது?என்பனவே, இவர்களது சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.

இந்த இரண்டு அணுகுமுறைகளுமே சரியானவை அல்ல. எதுவும் செய்யாமல் கவலை மட்டும் பட்டுக்கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்ய வேண்டுமே என்று கண்டதையும் செய்து கொண்டே இருப்பதும் பயனில்லை. இது,சில சமயங்களில் ஆபத்தானதும்கூட ..

பின், என்ன தான் செய்யவேண்டும்? மாற்று வழி உண்டு.  சரியான நேரத்தில் திட்டமிடல், திட்டமிட்டபடி, ஒழுங்காக , சீராக , குறிக்கோளுடன் செய்து வந்தாலே போதும். பின்னர் சும்மா இருந்தாலே போதும். நீங்கள் தூங்கும் பொது கூட உங்கள் சேமிப்பு , உங்களுக்காக இயங்கிக்கொண்டே இருக்கும். அது உங்களுக்கு நிம்மதியும் கொடுக்கும். உங்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பாகவும்  இருக்கும்.

அதற்கு சில வழிகளைக் கடைப்பிடித்தாலே போதுமானது. முக்கியாமாக காப்பீடு, பாதுகாப்பான முதலீடு, திட்டமிடாமல் திடீரென்று வரக்கூடிய அவசரத்தேவைக்கும் சேமிப்பு என்று,   சில வரைமுறைகளைச் செய்தாலே ( நிறையச் சம்பாதிக்கும் நேரத்தில்) ஒய்வு காலத்திலும் யாவரின் உதவியை எதிர் பார்க்காமல் வாழலாம்...

நமக்கொன்று ஆகிவிட்டால் என்ன ஆகுமோ என்ற கவலையை காப்பீடும், திடீரென்று வரும் அவசரச் செலவுகளுக்கு உங்கள் முதலீடும், உங்கள் கவலையைப் போக்கும்.

அதற்கு இப்பொழுதே காப்பீட்டையும், முதலீட்டையும் தொடுங்குவதே உங்களின் தலையாயக் கடமையாக் கொள்ளுங்குகள்.

முதலீடுகள் ஆங்காங்கே ,அவ்வவப்போது செய்யும் முதலீடில்லாமல் ,  திட்டமிட்டு, மாதாந்திரமுறையில், சந்தை, பொருளாதார நிலவரம் பற்றிய கவலைகொள்ளாமல் உங்கள் குறிக்கோளுக்காக நிரந்தரமாகத் தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள்..

 நாம் விரும்பியோ, விரும்பாமலோ பல செலவுகளைச் செய்து கொண்டு தான் வருகிறோம், அது நமக்கு லாபம் தருமா? என்று பார்த்தா செய்கிறோம்?  உங்கள் இந்த முதலீடை செலவாக நினைத்து செய்தால், நீங்கள் நினைக்காத நேரத்தில், நினைத்துப் பார்க்காத  தொகை உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  என்பது மட்டும் உறுதி.  இன்னும் பல ஆக்கப்பூர்வமான  பகிர்தல், விளக்கம் நேரில்.

நன்றி.  அருணகிரி.

Sunday, September 20, 2015

kavithai

தாய் .......

கணிப்பொறியும் போடமுடியாத கணிதம் நீ....
ஏவுகணையும் தாக்க முடியாத நெஞ்சுரம் நீ....
கடலின் ஆழமும்,பூமியின் பொறுமையும் நீ...
அற்புதங்கள் அனைத்தையும் பெற்ற சீமாட்டி நீ..
குறையே பார்க்காத கோமகள் நீ...
நிறைவுதான் நின் சொத்து...

பகுத்துப்பார்க்காமல் எதையும் விட்டதில்லை..
வகுத்துத் தந்தோர் வழியில் நெறிபிறழாமல்
தொகுத்தறிந்து தொடுவானம் தொட்டவள் நீ..
அறநெறி பிறழாமல் செயல்நெறி காட்டும்
நிகரில்லா செந்தமிழ்செல்வி நீ...

அனைவரையும் அரவணைக்கும் ஆழவிருட்சம் நீ..
சாஸ்திரமும் சொல்லாததை உன் புன்னகையே
சொல்லிவிடும் எமக்கு...
கல்வி பல கற்காவிட்டாலும் -உன்
கருத்தியல்  கல்வியாளர்களையும் கலங்கடித்து விடுமே..

மேதினியில் உள்ளோர் எல்லாம்
நீதிமானாக (நீதிநூல் வழி) நடத்தல்
நலம் பயக்கும் என்றுரைக்கும் 
மானுடப்பெருமாட்டியே.-- நின்னை
எழுதுவதென்றால் என் சிந்தை குளுருகின்றதே....

தோல்வியையே வேள்வியிலிட்டுகொளுத்தும் பெருமகளே..
கவலையை மகிழ்ச்சியாக்கி --
சீரிய எண்ணங்களின் சிந்தனைப் போக்கை
நாகரீக மனிதனும் நடைமுறைப் படுத்தி
வாழ்க்கைப் பயணத்தில் புதிய அத்தியாயம் படைக்க
நீ போதித்த பொற்சிந்தனை போதுமம்மா..

ப.அருணகிரி
கோயம்புத்தூர்
    தாய் .......

கணிப்பொறியும் போடமுடியாத கணிதம் நீ....
ஏவுகணையும் தாக்க முடியாத நெஞ்சுரம் நீ....
கடலின் ஆழமும்,பூமியின் பொறுமையும் நீ...
அற்புதங்கள் அனைத்தையும் பெற்ற சீமாட்டி நீ..
குறையே பார்க்காத கோமகள் நீ...
நிறைவுதான் நின் சொத்து...

பகுத்துப்பார்க்காமல் எதையும் விட்டதில்லை..
வகுத்துத் தந்தோர் வழியில் நெறிபிறழாமல்
தொகுத்தறிந்து தொடுவானம் தொட்டவள் நீ..
அறநெறி பிறழாமல் செயல்நெறி காட்டும்
நிகரில்லா செந்தமிழ்செல்வி நீ...

அனைவரையும் அரவணைக்கும் ஆழவிருட்சம் நீ..
சாஸ்திரமும் சொல்லாததை உன் புன்னகையே
சொல்லிவிடும் எமக்கு...
கல்வி பல கற்காவிட்டாலும் -உன்
கருத்தியல்  கல்வியாளர்களையும் கலங்கடித்து விடுமே..

மேதினியில் உள்ளோர் எல்லாம்
நீதிமானாக (நீதிநூல் வழி) நடத்தல்
நலம் பயக்கும் என்றுரைக்கும் 
மானுடப்பெருமாட்டியே.-- நின்னை
எழுதுவதென்றால் என் சிந்தை குளுருகின்றதே....

தோல்வியையே வேள்வியிலிட்டுகொளுத்தும் பெருமகளே..
கவலையை மகிழ்ச்சியாக்கி --
சீரிய எண்ணங்களின் சிந்தனைப் போக்கை
நாகரீக மனிதனும் நடைமுறைப் படுத்தி
வாழ்க்கைப் பயணத்தில் புதிய அத்தியாயம் படைக்க
நீ போதித்த பொற்சிந்தனை போதுமம்மா..

 ப.அருணகிரி
கோயம்புத்தூர்