Wednesday, November 4, 2015

நினைவலைகள் ...
                  தொடர்ச்சி ....1

வீட்டிலே வளர்த்த நாட்டுக்கோழி
ஞாயிற்றுக்கிழமைகளில் அதுதான்
எங்களுக்குச் சரியான தீனி......
இரவுநேர புரோட்டோக் கடைகளின்
இனிமையான சத்தம், இசையின்
வடிவமாய் வந்து எம்மைச் சேருமே...
இளைப்பாரவும், களைப்பாரவும்
எல்லாச் சூழ்நிலையும் வந்தெம்மைச்
சேர்ந்ததே!...
அந்தக் காட்சி வந்து,வந்து போகுதே.....

கம்பங்காடுகள் கண்ணுக்கெட்டும்
தூரம் பரந்து கிடக்க...
பூக்காடுகள் எங்கும் அழகாய்
காட்சியளிக்க....
திராட்சைத் தோட்டமோ
விரிந்திருக்க...
தக்காளிக் காட்டின் தனியழகும்,
பருத்திக் காட்டின் பரவசமும்
பார்க்கப் பார்க்க கொள்ளை கொள்ளுமே!

ரோஜாத்தொட்டமும், அதன் வேலியாய்
நொச்சிக் கூட்டமும்,...
நொச்சி இலையின் ஆவியும்,
பச்சைப் புல்வெளியும், ..எம்மை
பரவசமாக்கியதே.....
மொச்சைப் பயிரும், பச்சைப்பயிரும்
கச்சிதமாய் எமக்கு உணவானதே...

கரும்பை விளைவித்த எம்மக்கள்
கலங்காதிருந்தனரே.!
கரும்புப்பாகும், அதன் வெள்ளமும்
கட்டான உடம்பிற்குக் கட்டியம்
காட்டியதே.......
களங்கமில்ல மனம் படைத்த
எம் கண்ணியமிக்க கிராமமக்கள்
வெகுளியாய் வாழ்க்கை நடத்திய
வெகுஜனக் கூட்டம்.....பளிங்கு போல்
பாசங்காட்டும் பாசக்கூட்டம்.....
எம் கண்ணில் வந்து, வந்து போகுதே!...

நினைவுகள் தொடரும் ......
https://docs.google.com/spreadsheets/d/1uxfTyKp5cvqRGAEXzTY_ty4kcV68lubzdVGEwmlo4NM/edit#gid=2070558149
Displaying P_20150926_105404.jpg       நண்பர்களே வணக்கம்,  1998 ஆம் ஆண்டில் எந்தக்கவலையுமில்லாத அந்தக் காலக்கட்டத்தில் பென்சில்,             அழிப்பான் ( eraser ), பயன்படுத்தாமல், பால்பாயின்ட் பேனாவினால் மட்டுமே நான் வரைந்த மகாத்மாவின் அழகிய படம். இன்று இதைப்போல வரைய நேரமோ, அதற்கான சூழ்நிலையோ இல்லாதது வருத்தமே....

அப்படி வாய்ப்புக் கிடைத்தால் பல படங்களை இன்றும் , என்றும் உருவாக்கலாம்.....

குறிப்பு :  இந்தப்படம் பல ஆண்டுகளுக்குப் பின் எனக்குக் கிடைத்தது..உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..

நன்றி...

அருணகிரி...