உங்களுக்காக, உங்கள் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கிப் படியுங்கள்
பணம் குறித்த கவலை யாருக்குத்தான் இல்லை? வயதாகிக் கொண்டேதான் போகிறது. குழந்தைகள் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் நிச்சயமாக வரப் போகும் செலவுகளே வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றன.எதிர்பாராமல் என்னென்ன செலவுகள் வருமோ யார் கண்டது? கூடவே தேவைகளும் , ஆசைகளும் சேர்ந்து கொள்ளும். சொந்த வீடு வாங்கத்தான் வேண்டும்.. நாமும் ஏன் இன்பச்சுற்றுலா செல்லக்கூடாது ?..என்ற எண்ணமும் வந்து போகும்..
இப்படிப்பட்ட எதிர்காலத் தேவைகள் மற்றும் ஆசைகளே ,பணம் குறித்த நமது கவலை கொள்ளச் செய்கின்றன.. இக்கவலைகளைக்கண்டு கொள்வதே இல்லை நாம்.. நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டுவிடுகிறார்கள் நம்மில் பலர்..வருமானம் வரட்டும், செலவுகள் அன்றாடம் இருக்கவே செய்கின்றன. மிஞ்சுவது கவலை மட்டுமே. எனவே சேமிக்கக் கற்றுக் கொண்டால், அந்த சேமிப்பு வளர,வளர , அந்தச் சேமிப்புக்கள் , அவ்வப்போது எழும் ஆசைகளுக்கு உதவும். புதிய டிவி, கார், புது மாடல் செல்போன் என வீடெங்கும் பரிமளிக்கும்.
பத்து வருடங்கள் கழித்து என்ன நடக்கும் , பத்து மாதம் கழித்து கூட என்ன ஆகும்? என்ற எண்ணம் கிடையாது நம்மில் பலருக்கு. அரசாங்கம் அறிவிக்கும் வரிச்சலுகைகளுக்கு ஏற்றவாறு ஆங்காங்கே முதலீடுகளைச் செய்துவிட்டு, எது எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாமல் இருப்பார்கள். ஆனால், இவற்றிற்கெல்லாம் இடையில், நிலத்திற்குக்கீழ் ஓடும் நதியைப்போல் அடிமனதில் எதிர்காலம் குறித்த கவலை மட்டும் சலசலத்துக் கொண்டே இருக்கும்.
பணம் புரட்டல்: இவர்கள் இப்படி என்றால், இன்னொரு வகை மற்றொரு முனையில் உள்ளனர். இவர்களுக்கு சதா சர்வகாலமும் பணம் குறித்த கேள்விகளும் , கவலைகளும் தான். எப்பொழுதும் முதலீடுகள் குறித்தே ஏதாவது யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
எந்தப் பணத்தை எப்படிப் புரட்டுப் போட்டால் இன்னமும் அரை சதவீத வட்டியோ, லாபமோ கிடைக்கும் என்று துருவிக்கொண்டே இருப்பார்கள். இன்றைய மார்கெட் டிரென்ட் என்ன? , எது நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது?என்பனவே, இவர்களது சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.
இந்த இரண்டு அணுகுமுறைகளுமே சரியானவை அல்ல. எதுவும் செய்யாமல் கவலை மட்டும் பட்டுக்கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்ய வேண்டுமே என்று கண்டதையும் செய்து கொண்டே இருப்பதும் பயனில்லை. இது,சில சமயங்களில் ஆபத்தானதும்கூட ..
பின், என்ன தான் செய்யவேண்டும்? மாற்று வழி உண்டு. சரியான நேரத்தில் திட்டமிடல், திட்டமிட்டபடி, ஒழுங்காக , சீராக , குறிக்கோளுடன் செய்து வந்தாலே போதும். பின்னர் சும்மா இருந்தாலே போதும். நீங்கள் தூங்கும் பொது கூட உங்கள் சேமிப்பு , உங்களுக்காக இயங்கிக்கொண்டே இருக்கும். அது உங்களுக்கு நிம்மதியும் கொடுக்கும். உங்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
அதற்கு சில வழிகளைக் கடைப்பிடித்தாலே போதுமானது. முக்கியாமாக காப்பீடு, பாதுகாப்பான முதலீடு, திட்டமிடாமல் திடீரென்று வரக்கூடிய அவசரத்தேவைக்கும் சேமிப்பு என்று, சில வரைமுறைகளைச் செய்தாலே ( நிறையச் சம்பாதிக்கும் நேரத்தில்) ஒய்வு காலத்திலும் யாவரின் உதவியை எதிர் பார்க்காமல் வாழலாம்...
நமக்கொன்று ஆகிவிட்டால் என்ன ஆகுமோ என்ற கவலையை காப்பீடும், திடீரென்று வரும் அவசரச் செலவுகளுக்கு உங்கள் முதலீடும், உங்கள் கவலையைப் போக்கும்.
அதற்கு இப்பொழுதே காப்பீட்டையும், முதலீட்டையும் தொடுங்குவதே உங்களின் தலையாயக் கடமையாக் கொள்ளுங்குகள்.
முதலீடுகள் ஆங்காங்கே ,அவ்வவப்போது செய்யும் முதலீடில்லாமல் , திட்டமிட்டு, மாதாந்திரமுறையில், சந்தை, பொருளாதார நிலவரம் பற்றிய கவலைகொள்ளாமல் உங்கள் குறிக்கோளுக்காக நிரந்தரமாகத் தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள்..
நாம் விரும்பியோ, விரும்பாமலோ பல செலவுகளைச் செய்து கொண்டு தான் வருகிறோம், அது நமக்கு லாபம் தருமா? என்று பார்த்தா செய்கிறோம்? உங்கள் இந்த முதலீடை செலவாக நினைத்து செய்தால், நீங்கள் நினைக்காத நேரத்தில், நினைத்துப் பார்க்காத தொகை உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பது மட்டும் உறுதி. இன்னும் பல ஆக்கப்பூர்வமான பகிர்தல், விளக்கம் நேரில்.
நன்றி. அருணகிரி.
No comments:
Post a Comment