Wednesday, October 21, 2015

நினைவலைகள்

பசுமை மாறா நினைவுகளும்;
மாற வேண்டிய நினைவுகளும் ;
திரும்பவே வரக்கூடாத நினைவுகளும் ;
அடிக்கடி வந்து, வந்து போகுதே.....!
ஆம்...ஆம்...வந்து, வந்து போகுதே....!

பொறுப்பே இல்லாமல் படிப்பைத்
தொடர்ந்ததும் .... ...  நல்ல
செருப்புக்கூட இல்லாமல் பள்ளிக்குச்
சென்று வந்ததும்......எந்த
வெறுப்பும் இல்லாமல் நண்பர்களுடன்
பழகி வந்ததும்.....
எதிர்காலம் குறித்த கவலையே இல்லாமல்
ஊர்சுற்றித் திரிந்ததும்.......
வந்து , வந்து போகுதே....!

நானூறு மதிப்பெண் என்பது
நாட்டிலேயே ஒரு சிலர்தான்..அன்று..
கிட்டயும், கபடியும் விளையாடிய
எமக்கதுவே தேசிய விளையாட்டு:
கீற்றுக் கொட்டகையில் மணல் குவித்து
ஒய்யாரமாய் திரைப்படம் பார்த்ததும்...
ரோட்டோரப் பாலத்தில், பேருந்து
மக்களுக்கு டாட்டா காட்டியதும்....
வந்து , வந்து போகுதே...!

உச்சி வெயிலின் உக்கிரம் தெரியாது
ஓடி,ஓடி விளையாடியதும்...
களைப்பே தெரியாமலும் , உழைப்பின்
வாசமே புரியாமலும் நித்தம், நித்தம்
பெற்றோரின் பின்புலத்தில் காலம்
கழித்ததும்...சுவடாய் வந்து, வந்து போகுதே...!..........நினைவுகள் தொடரும்....

No comments:

Post a Comment